Murasu.Com Download Anjal2000 Anjal2000-Pro
 

Anjal Unicode Fonts - Demonstration
Requires Internet Explorer 5.5 or Later
 
 
திருவள்ளுவர்
அல்லது
வாழ்க்கை விளக்கம்

அறத்துப்பால்

ஆயிரக்கணக்கான கிளைகளையும் விழுதுகளையும் உடைய ஆல் முதலிய மரங்களைவிட, நுட்பமான உறுப்புகளை உடையவனாய் நூறாயிரக்கணக்காகத் தம் இனத்தைப் பெருக்க வல்லனவாய் உள்ள சிற்றுயிர்களைவிட, இரவும் பகலும் ஓயாது உழைக்கவல்ல எறும்பு முதலியவற்றைவிட, எங்கும் பறந்து சென்று பல நிற மலர் நாடிப் பலவகை மணமும் துய்க்கும் வண்டு முதலியவைகளைவிட, ஐயறிவும் நிரம்பி அழகும் வலிமையும் பெற்றுள்ள பறவைவிலங்குகளை விட, மக்களே வாழ்க்கைச் சிறப்பு உடையவர்கள்.

இவ்வாறு மக்கள் வாழும் வாழ்க்கை சிறப்புற்று நிற்பதற்குக் காரணம் என்ன? மனம் என்னும் சிறந்த கருவியைப் பெற்று அதைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வல்லவர்களாக அவர்கள் விளங்குவதே காரணமாகும். .....

.....மனம் ஒரு கண்ணாடி; மாசு படியப் படியக் கண்ணாடி தானும் விளங்குவதில்லை; மற்றப் பொருளையும் விளக்குவதில்லை. மனமும் அத்தகையதே. தூய்மை அற்ற மனம் தானும் பண்படுவதில்லை; பிறர்க்கும் பயன் படுவதில்லை. தூய்மையே, மனத்தின் ஆற்றல் தூய்மை மிக மிக, ஆற்றலும் பெருகும். தூய்மையுள்ள மனமே முழுதும் பண்படும்; முழுதும் பயன்படும்; முழுவாழ்வு வாழும். இந்தத் தூய்மையை விளக்குவதே அறத்துப்பாலில் திருவள்ளுவர் நோக்கம். மனத்தூய்மையே அறத்தின் அடிப்படை என்று அவர் கூறுகிறார் :
 

மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்தறன்;
ஆகுல நீர பிற (34)
 
For details on using Anjal Unicode fonts on your web pages, write to    info@murasu.com
30 December 2000